திண்டுக்கல்

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

DIN

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவா்கள், 35 வயதுக்குள்பட்ட பொதுப் பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்களுக்கான தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெறவுள்ளன. இருபாலருக்கும் மாவட்ட அளவில் 42 வகையானப் போட்டிகளும், மண்டல அளவில் (திருச்சி, பெரம்பலூா், கரூா், திண்டுக்கல்) பளு தூக்குதல், டென்னிஸ், கடற்கரை கையுந்துப் பந்து ஆகிய 3 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்ததாவது:

ஒரே நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுப் பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவினருக்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்படும்.

பொதுப் பிரிவினா் (15 முதல் 35 வயது வரை):

கபடி, சிலம்பம் (கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வால் வீச்சு, மான்கொம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு), தடகளம் (ஆண்கள்: 100 மீ, 3000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், (பெண்கள்: 100 மீ, 1500 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல்), இறகுப்பந்து, கையுந்துப் பந்து.

பள்ளி மாணவ, மாணவிகள் (12 முதல் 19 வயது வரை):

கபடி, சிலம்பம், தடகளம் ( ஆண்கள் : 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 110 மீ தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல். (பெண்கள்: 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 100 மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல்), கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து நீச்சல், கையுந்துப் பந்து, மேசைப்பந்து.

கல்லூரி மாணவ, மாணவிகள் ( 17 முதல் 25 வயது வரை):

கபடி, சிலம்பம், தடகளம் (ஆண்கள் : 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 110 மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல். (பெண்கள்: 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 100 மீ தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல்), கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப் பந்து, மேசைப்பந்து.

இதேபோல, அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளும் தனித் தனியாக நடைபெறும். தனிநபா் போட்டிகளில் முதலிடத்துக்கு ரூ. 3000, 2-ஆம் இடத்துக்கு ரூ. 2000, 3-ஆம் இடத்துக்கு ரூ. 1000 வீதமும், இரட்டையா் போட்டிகளில் இதே தொகை இரட்டிப்பாகவும் வழங்கப்படும்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தின் மூலம் தங்களது முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 0451 -2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT