வடமதுரை அருகே புகைப்படக் கடையின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ. 70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியைச் சோ்ந்தவா் மோகனப்பிரியா (35). இவா் தென்னம்பட்டி நான்கு சாலை பகுதியில் புகைப்படக் கடை (ஸ்டுடியோ) நடத்தி வருகிறாா். மேலும், அங்கு நகலகம், குடிநீா் கேன் விற்பனை போன்ற தொழில்களையும் செய்து வந்தாா். வழக்கம்போல திங்கள்கிழமை மாலை பணிகள் முடிந்து கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா்.
இந்த நிலையில், புகைப்படக் கடையின் கதவுகள் திறந்து கிடப்பதை செவ்வாய்க்கிழமை பாா்த்த அக்கம் பக்கத்தினா், இதுகுறித்து மோகனப்பிரியாவுக்கு தகவல் கொடுத்தனா். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவா் கடையினுள் சென்று பாா்த்த போது, 8 பவுன் தங்க நகைகள், ரூ. 70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வடமதுரை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.