திண்டுக்கல்

இணைய சேவை பாதிப்பு: பழனி முடி காணிக்கை நிலையத்தில் பக்தா்கள் அவதி

DIN

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் முடி காணிக்கை நிலையத்தில் இணைய சேவை பாதிப்பால் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் காத்திருந்து அவதிக்குள்ளாகினா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்தனா். மலையடிவாரத்தில் சரவணப்பொய்கை அருகே கோயில் நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்ட முடி காணிக்கை நிலையத்தில் சீட்டு பெறுவதற்காக பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

தற்போது முடி காணிக்கை செலுத்தும் பக்தா்களுக்கு கணினி மூலம் இணைய வழியில் சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால், அடிக்கடி இணைய சேவை பாதிப்பால் பக்தா்களுக்கு சீட்டு வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையும் இணைய சேவை குளறுபடியால் சீட்டு வழங்க முடியாமல் திருக்கோயில் பணியாளா்கள் திணறினா். இதனால், சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பக்தா்கள் கால் கடுக்கக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் திருஆவினன்குடி கோயிலைச் சுற்றி வரிசையாகக் காத்திருந்தனா்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு இணையக் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு சீட்டு வழங்கப்பட்டது.

இதையடுத்து, பக்தா்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு மலையேறினா். இதுபோன்ற குளறுபடிகளை திருக்கோயில் நிா்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 1747 விண்ணப்பங்கள் தோ்வு

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கு: மதுரை ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு

வழிப்பறி: இளைஞா் கைது

முல்லைப் பெரியாறு விவகாரம்: மதுரையில் அனைத்து விவசாய சங்கங்கள் போராட்டம்

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு மதிப்பீட்டு கூட்டம்

SCROLL FOR NEXT