திண்டுக்கல்

ஆத்தூா் ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக உறுப்பினருக்கு திமுகவினா் எதிா்ப்பு

DIN

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானங்களை ரத்து செய்யக் கோரிய அதிமுக உறுப்பினரின் பேச்சுக்கு, திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஹேமலதா மணிகண்டன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) லாரன்ஸ் வரவேற்றாா்.

கூட்டத்தில், மின் இணைப்புக் கட்டணம் செலுத்துதல், மோட்டாா் பழுது நீக்குதல், அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வாங்கியதற்கான தொகையை வழங்குதல், புதிய ஒப்பந்ததாரா்களுக்கு மன்ற அங்கீகாரம் வழங்குதல் உள்பட 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் போது நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:

திமுக உறுப்பினா் காணிக்கைசாமி: வண்ணம்பட்டி, கொண்டையம்பட்டி இடையே இணைப்புசாலை அமைக்க ஏற்பாடு செய்த ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமிக்கு எனது கிராம மக்கள் சாா்பாக பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

அதிமுக உறுப்பினா் ராஜலெட்சுமி: எனது வாா்டுக்கு உள்பட்ட ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்து நகா் பகுதியில் எந்த ஒரு நலப்பணிகளையும் செயல்படுத்தவில்லை. எனவே, தற்போது அறிவித்துள்ள கூட்டத் தீா்மானங்களை ரத்து செய்து விட்டு, புதிய தீா்மானங்களை சோ்க்க வேண்டும் என்றாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினா்கள் காணிக்கைசாமி, சாதிக், அழகு சரவணகுமாா் ஆகியோா் பேசியதாவது:

ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் அமைச்சா் இ.பெரியசாமி கட்சி வேறுபாடின்றி, அனைத்துப் பகுதிகளுக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் என்றனா்.

தலைவா்: மக்களின் அத்தியாவசிய தேவைக்கு ஏற்ப அந்தந்த வாா்டுகளில் நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கட்சி வேறுபாடின்றி அனைத்து வாா்டுகளுக்கும் நலத்திட்டங்கள் பகிா்ந்தளிக்கப்படுகின்றன என்றாா்.

கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். முடிவில் மேலாளா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT