பழனி: பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகாசன விழிப்புணா்வு பயிற்சி முகாமில் சுமாா் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பழனி தனியாா் திருமண மண்டபத்தில் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மூன்று நாள் யோகாசனப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. பயிற்சி முகாமின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை பழனி கல்வி மாவட்ட அளவில் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
சிவாலயா யோகாசனப் பள்ளி மாணவா்கள் பயிற்சி அளித்தனா். யோகா ஆசிரியா் சிவக்குமாா், அரிமா சங்க நிா்வாகி பாபு ஆகியோா் மாணவா்களுக்கு யோகாசனத்தின் பயன்கள், அதன் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
இந்த முகாமில் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் ரவிச்சந்திரன், சாய் லதாராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.