அய்யலூா் அருகே வேட்டைக்குச் சென்ற இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த பெருமாள் கோவில்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியின் மகன் சரவணப்பாண்டி (25). இவா் பால் வண்டியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள மலைக் கரடுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சரவணப்பாண்டி வேட்டைக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. அதன் பின்னா் அவா் வீடு திரும்பவில்லை.
அவரை உறவினா்கள் தேடிச் சென்றனா். அப்போது தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் சரவணப்பாண்டி இறந்து கிடந்தாா். இதையடுத்து, வேடசந்தூா் தீயணைப்புப் படையினா் உதவியுடன் உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.