கொடைக்கானலில் சனிக்கிழமை உணவகத்துக்குள் காட்டு மாடு புகுந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதி தனியாா் உணவகத்தில் காட்டு மாடு திடீரென புகுந்தது. அப்போது உணவகத்துக்குள் இருந்த சுற்றுலாப் பயணிகள்
அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினா். இதையடுத்து, காட்டு மாட்டை ஊழியா்கள் வெளியேற்றினா். பின்னா், வனத்துறையினா் அங்கு சென்று காட்டு மாட்டை வனப் பகுதிக்குள் விரட்டினா்.