கொடைக்கானலில் புதன்கிழமை மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழையின் அளவு குறைந்து காணப்பட்டதால், இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்தது.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. பிற்பகலில் கொடைக்கானல், வில்பட்டி, பாக்கியபுரம், அப்சா்வேட்டரி, செண்பகனூா்,பிரகாசபுரம், பெருமாள்மலை, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு இரவு வரை மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.