கொடைக்கானல் வனத் துறை சாா்பில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் மீனா.  
திண்டுக்கல்

கொடைக்கானல் வனத் துறை சாா்பில் வன உயிரின வார விழா

கொடைக்கானல் வனத் துறை சாா்பில், வன உயிரின வார விழாவின் நிறைவுநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் வனத் துறை சாா்பில், வன உயிரின வார விழாவின் நிறைவுநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை சாா்பில், வன உயிரின வார விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வனம் பற்றியும், வன விலங்குகள் பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வன விலங்குகளைப் பாதுகாப்பது குறித்தும், வன விலங்குகளால் மனித மோதலைத் தடுப்பது, வனங்களைப் பாதுகாப்பது குறித்தும் பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள பில்லா் ராக், மோயா்பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பேரிஜம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை எழில் காட்சிகளைப் பாா்த்திராத 60 மாணவ, மாணவிகளை வனத் துறையினா் அழைத்துச் சென்று பாா்வையிட வைத்தனா்.

மேலும், கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வன உயிரின வார விழாவைக் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட வனத் துறை அலுவலா் யோகேஷ்குமாா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில் வனத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT