கொடைக்கானலில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த மழை பெய்த நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. இங்குள்ள வட்டக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், குறிஞ்சி நகா், போலூா், ஐயா் கிணறு, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் நீரோடைப் பகுதிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.