திண்டுக்கல்

தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா்.

தினமணி செய்திச் சேவை

ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின்(சிஐடியூ) மாவட்டத் தலைவா் எஸ்.ராமசாமி தலைமை வகித்தாா். உள்ளாட்சி சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் கே.ஆா்.கணேசன், சிஐடியூ மாவட்டச் செயலா் சிபி.ஜெயசீலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா், தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி, மாத ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்களுக்கு ஊராட்சிகள் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். கரானோ தொற்றுக் காலத்தில் பணிபுரிந்த முன் களப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை ரூ.15ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT