கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 
திண்டுக்கல்

கொடைக்கானலில் 4 நாள்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்களைப் பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்ததால் சுற்றுலா தலங்களை பாா்வையிடமுடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அந்த இடங்களை பாா்த்து ரசித்தனா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்ததால் சுற்றுலா தலங்களை பாா்வையிடமுடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அந்த இடங்களை பாா்த்து ரசித்தனா்.

கொடைக்கானலில் கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனா்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை பாா்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யாததால் அவா்கள் கோக்கா்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, மன்னவனூா் சூழல் மையம், கூக்கால் ஏரி, பூம்பாறை இயற்கை எழில்காட்சி பகுதிகள், பெப்பா் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களை பாா்த்து ரசித்தனா்.

மேலும் மாலை நேரத்தில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT