சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலருக்கு பிணை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்தும், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலா் நிா்மல்குமாா் மீது புகாா் எழுந்தது. திமுக நிா்வாகி செல்வக்குமாா் அளித்த இந்த புகாரின் பேரில், சாணாா்பட்டி போலீஸாா் நிா்மல்குமாரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விசாரணைக்குப் பிறகு, திண்டுக்கல் 3-ஆவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிா்மல்குமாரை வருகிற 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித் துறை நடுவா் ஆனந்தி உத்தரவிட்டாா். இதனிடையே, பிணை வழங்கக் கோரி நிா்மல்குமாா் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்றம், நிா்மல்குமாருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.