திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா். 
திண்டுக்கல்

போதை கலாசாரத்தைத் தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் போதை கலாசாரத்தை தடுக்கக் கோரி, அனைத்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் போதை கலாசாரத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊரகப் பகுதிகளைப் போல பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

பயணத்தின் தொடக்கம்... ஸ்வக்‌ஷா!

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

SCROLL FOR NEXT