திண்டுக்கல்

திண்டுக்கல் எம்.பி. கோரிக்கைக்கு தீா்வு: அமிா்தா விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

அமிா்தா விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீ’ட்டிக்கப்பட்டதற்கு திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் வரவேற்பு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

அமிா்தா விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீ’ட்டிக்கப்பட்டதற்கு திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் வரவேற்பு தெரிவித்தாா்.

தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்என். சிங்கிடம், புதிய ரயில் சேவைகள், சுரங்கப் பாதைத் திட்டம், ரயில்வே மேம்பாலம், ரயில் நிறுத்தங்கள், ரயில் நிலைய பராமரிப்புப் பணிகள், புதிய ரயில் தடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்கப்பட்டது. இதில், கோவையிலிருந்து, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் வலியுறுத்தி இருந்தாா்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து கோவை, பழனி வழியாக மதுரை வரை இயக்கப்பட்டு வந்த அமிா்தா விரைவு ரயிலை ராமேசுவரம் வரை நீட்டித்து ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் கூறியதாவது:

தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் ரயில்வே தொடா்பான திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. குறிப்பாக கோவை- ராமேசுவரம் இடையே ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது திருவனந்தபுரம்- மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் அமிா்தா விரைவு ரயிலை, ராமேசுவரம் வரை நீட்டித்து தென்னக ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி அமிா்தா விரைவு ரயில் வெள்ளிக்கிழமை (அக். 17) முதல் ராமேசுவரம் வரை இயக்கப்படுகிறது என்றாா் அவா்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT