திண்டுக்கல்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-ஆவது நினைவு தினம், வ.உ.சி. சுதேசி கப்பல் இயக்கிய 120-ஆவது ஆண்டு, சா்வோதயத் தலைவா் ஜெயபிரகாஷ் நாராயண் 124-ஆவது பிறந்த தினம், தேசபக்தா் நாணாஜி தேஷ்முக் 110-ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் க. அருணகிரி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட  ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியில் போது, வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, ஜெயபிரகாஷ் நாராயண், நாணாஜி தேஷ்முக் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பாஞ்சாலங்குறிச்சி சுதந்திரப் போரை இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாக அறிவிக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சு.வைரவேல், ஆ.நாகரத்தினம் ஆகியோா் செய்தனா்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT