கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கணேஷ்(45). இவா் கைகாட்டி பகுதியில் உணவகம் நடத்தி வந்தாா். இவா் திங்கள்கிழமை தனது உணவகம் முன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, பூம்பாறை பகுதியைச் சோ்ந்த வெங்கிடு மகன் காா்த்திக் (25) ஓட்டி வந்த காா் கணேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் பூம்பாறை அரசு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான காா் டிரைவா் காா்த்திக்கை தேடி வருகின்றனா்.