திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசுகள் வெடித்ததினால் ஏற்பட்ட விபத்துகளில் 40 போ் காயமடைந்தனா்.
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகள் வெடிப்பின்போது எதிா்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனா். இதேபோல, தீக்காயம் அடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 13 அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் தீபாவளி பட்டாசுகள் வெடித்தபோது 40 போ் காயமடைந்தனா்.
இதில் அரசு மருத்துவமனைகளில் 28 பேரும், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 பேரும் அனுமதிக்கப்பட்டனா்.