கொடைக்கானல்: கொடைக்கானலில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் ஏரிகளில் நீா் நிரம்பி வழிந்தோடியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வடகிழக்குப் பருவ மழையால் கடந்த ஐந்து நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தண்ணீா் நிரம்பி வழிந்தோடுகிறது. மேலும், கொடைக்கானலில் உள்ள நீரோடைப் பகுதிகளான பாம்பாா் அருவி, மூலையாறு அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, வெள்ளிநீா் அருவி, புல்லாவெளி அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.