கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்ததால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அப்சா்வேட்டரி, தைக்கால், சீனிவாசபுரம், லாஸ்காட் சாலை, வெள்ளி அருவி செல்லும் சாலை, புலிச்சோலை பகுதி, உகாா்த்தே நகா், பெருமாள்மலை செல்லும் சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான மலைச் சாலைகள் சேதமடைந்தது.
இதனால் வாகன ஓட்டுனா்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.