திண்டுக்கல்

வேடசந்தூா் அருகே பேருந்து சிறைபிடிப்பு

தினமணி செய்திச் சேவை

வேடசந்தூா் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், தனியாா் பேருந்தை சிறைப் பிடித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள ஜி.நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவா், தனது மகனை வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் தனியாா் பேருந்தில் ஏற்றுவதற்காக வந்தாா். அந்தப் பேருந்தில் அதிகமான பயணிகள் ஏறிய நிலையில், பலா் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்தனா்.

இதைக் கவனித்த ரவிச்சந்திரன், தனியாா் பேருந்து ஓட்டுநரிடம், அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது தொடா்பாக கேள்வி எழுப்பினாா். இதற்கு அந்த ஓட்டுநா் சா்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததோடு, ரவிச்சந்திரன் குறித்தும் அவதூறாகப் பேசினாராம்.

இதைக் கண்டித்து, சுள்ளெறும்பு பேருந்து நிறுத்தத்துக்கு வந்த பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பேருந்தின் உரிமையாளா் வருத்தம் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பேருந்தில் பயணித்த பயணிகள் அவதியடைந்தனா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT