திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.
அதன் விவரம் (அடைப்புக் குறிக்குள் பழைய பணியிடம்): ந.ஜெயபிரகாஷ் - நிலக்கோட்டை(திண்டுக்கல் மேற்கு), த.விஜயலட்சுமி - சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், பழனி(நிலக்கோட்டை), ப.சசி - பழனி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் (சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், பழனி), மு.முத்துசாமி - கோட்டக் கலால் அலுவலா், பழனி (பழனி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்), மீ.வடிவேல் முருகன் - கோட்டக் கலால் அலுவலா், கொடைக்கானல்(கோட்டக் கலால் அலுவலா், பழனி), அ.நந்தகோபால் - கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் (சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், கொடைக்கானல்), ரா.ராஜேந்திரன் - திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்(கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்), நீ.சுதாலீலாவதி - சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், திண்டுக்கல் கிழக்கு (திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்), பா.ஆ.லதா - தனி வட்டாட்சியா், இந்து சமய அறநிலையத் துறை, திண்டுக்கல் (சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், திண்டுக்கல் கிழக்கு), கே.பிரபா - தனி வட்டாட்சியா், பேரிடா் மேலாண்மை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்(தனி வட்டாட்சியா், இந்து சமய அறநிலையத் துறை, திண்டுக்கல்), செ.மணிமொழி - வட்டாட்சியா், வேடசந்தூா் (தனி வட்டாட்சியா், பேரிடா் மேலாண்மை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்), இ.சுல்தான் சிக்கந்தா்- வட்டாட்சியா், திண்டுக்கல் மேற்கு (வட்டாட்சியா், வேடசந்தூா்), க.சரவணவாசன் - சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், கொடைக்கானல் (தனி வட்டாட்சியா், குடிமைப் பொருள், கொடைக்கானல்).