மதுரை மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் 5 ஆயிரம் ஹெக்டேரில் மானாவாரி சாகுபடியை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
மானாவாரி சாகுபடியை மேம்படுத்தும் வகையில் 4 ஆண்டுகளுக்கான புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு தலா 1000 ஹெக்டேர் பரப்பு கொண்ட 25 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நிகழ் ஆண்டில் 5 தொகுப்புகளில் இத் திட்டப் பணிகள் தொடங்க உள்ளன.
விவசாயிகளின் ஆலோசனையின்படி, ஆரம்பகட்ட பணிகளாக தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள், கிராமக் குளங்கள் போன்ற மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதற்கென ஒவ்வொரு தொகுப்புக்கும் தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். மேலும் உழவுப் பணிக்காக ஹெக்டேருக்கு ரூ.1250 வீதம் பின்னேற்பு மானியமாக, விவசாயிகளை உள்ளடக்கிய தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிற்கு அளிக்கப்படும். இத் திட்டத்தை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.