மதுரை

செம்பட்டியில் குடிநீர் கோரி சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே செம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் சீராக வழங்கக்கோரி புதன்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனர்.

DIN

உசிலம்பட்டி அருகே செம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் சீராக வழங்கக்கோரி புதன்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனர்.
 செம்பட்டி கிராமத்திற்கு சில மாதங்களாக குடிநீர் சீராக வழங்கவில்லையாம். இப்பகுதிக்கு குடிநீர் சீராக வழங்க கோரி பலதடவை மனுக்கள் கொடுத்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் செம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி வட்டாட்சியர் செ.இ.ராமச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் மறியல் செய்தோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.இரண்டு நாள்களில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் இப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT