சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இத்திருக்கோயில் வைகாசி திருவிழா மே 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். பூக்குழி இறங்கியவர்களில் விடாத்திகுளத்தைச் சேர்ந்த பதினெட்டாம்படி (50) என்பவர் தவறி விழுந்து காயமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.