மதுரை

தண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாக பாலாபிஷேகம்

மதுரை நேதாஜி சாலையில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாக பாலாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரை நேதாஜி சாலையில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாக பாலாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
 வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலில் மூலவருக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
 நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். உற்சவருக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது.
 மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கு பால்குடம் ஏந்திய பக்தர்கள் தண்டாயுதபாணி திருக்கோயிலில் வணங்கிவிட்டு சென்றதால் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
 மதுரை ராஜாஜி குழந்தைகள் பூங்கா அருகேயுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்கா முருகன் திருக்கோயிலிலும் வைகாசி விசாக பாலாபிஷேகம் நடைபெற்றது.
 மதுரை நகரில் உள்ள அனைத்து முருகன் திருக்கோயில்களிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT