மதுரை

மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 25 பேர் இடமாற்றம்: துணை ஆட்சியர்கள் 12  பேருக்கு பதவி உயர்வு

மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரிகள் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

DIN

மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரிகள் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 மதுரை மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றும் கே.வேலுச்சாமி, ஆதிதிராவிடர் நலத்துறையின் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
 சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் வெளிவட்ட சுற்றுச்சாலைக்கான நிலஆர்ஜித அதிகாரியாகப் (டிஆர்ஓ நிலையில்) பணியாற்றும் ஆர்.குணாளன், மதுரை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உள்பட 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
 இதேபோல, துணை ஆட்சியர் நிலையில் பணியாற்றும் அலுவலர்கள் 12 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
 மதுரை வருவாய் கோட்டாட்சியராகப் பணியாற்றும் எஸ்.அசோகன், பதவி உயர்வில் வருவாய் நிர்வாகத் துறை ஆணையரகத்தில் துணை ஆணையராக (டிஆர்ஓ நிலையில்) நியமிக்கப்பட்டுள்ளார்.
 மதுரை மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலராகப் பணியாற்றும் எஸ்.ரெகோபயாம் பதவி உயர்வில், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையில் ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தமிழக அரசின் உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT