கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி அருகே, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரிமீது மோதியுள்ளது. இதில், பேருந்தில் பயணம் செய்த, சங்கரன்கோவிலைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (30), இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். ஓட்டுநர்களான முத்து, ஆனந்தன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.