மதுரையில் வீடு புகுந்து செல்லிடப்பேசி திருடியதாக 13 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை சுப்ரமணியுபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் முகமது சாகித்(50). சம்பவத்தன்று இவர் வீட்டின் கதவை திறந்துவைத்து விட்டு, குளியலைறைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கூடத்தில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்லிடப்பேசிகள் திருடுபோனது தெரிந்தது.
சம்பவம் தொடர்பாக அவர் அளித்தப் புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் செல்லிடப்பேசி திருடப்பட்ட சம்பவத்தில் சிலைமான் முஸ்லீம் தெருவைச் சேர்ந்த ஆரிப்(42), சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரித்தபோது, வீடு புகுந்து செல்லிடப்பேசிகளைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்து அவர்களிடம் இருந்து செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.