மதுரை

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: கணவர், மனைவி, மகன் மீது வழக்கு

மதுரை மாவட்டம், எழுமலை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி செய்த கணவர், மனைவி, மகன் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

DIN

மதுரை மாவட்டம், எழுமலை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி செய்த கணவர், மனைவி, மகன் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எழுமலை அருகே உள்ள கரையான்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி போதுமணி(45). இவருக்கு அறிமுகமான சந்தை, அவரது மனைவி திரௌபதி மகன் அமர்நாத் ஆகியோர், போதுமணி மகன்கள் இருவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். அவர்களை நம்பிய போதுமணி, ரூ.1.50 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்துள்ளார். இந்நிலையில், போதுமணியின் மகன் ஒருவர் இறந்து விட்டதையடுத்து, கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல் அலைக்கழித்த மூவரும், போதுமணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போதுமணி அளித்த புகாரின்பேரில், எழுமலை போலீஸார் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT