மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தி, மணமகன் உள்பட 5 பேர் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேரையூர் அருகே உள்ள எம்.புளியங்குளம் கிராமத்தில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வில்லூர் போலீஸாருடன் புளியங்குளம் கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
அதில், முனியாண்டி என்பவரின் 16 வயது மகளுக்கும், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கருத்தபாண்டிக்கும் வீட்டில் வைத்து புதன்கிழமை திருமணம் நடக்கவிருந்தது தெரியவந்தது. உடனே, திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
மேலும், இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில், சிறுமியின் தந்தை முனியாண்டி, தாய் கிருஷ்ணம்மாள், மணமகன் கருத்தபாண்டி, அவரது தந்தை பாண்டி, தாய் பாக்கியலட்சுமி ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.