மதுரை

மோசமான வானிலை: விமானங்கள் தாமதம்

வானிலை மேகமூட்டத்கதுடன் காணப்பட்டதால், தூத்துக்குடி செல்ல வேண்டிய தனியார் விமானம் புதன்கிழமை மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

DIN

வானிலை மேகமூட்டத்கதுடன் காணப்பட்டதால், தூத்துக்குடி செல்ல வேண்டிய தனியார் விமானம் புதன்கிழமை மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
 சென்னையிலிருந்து புதன்கிழமை மதியம் தூத்துக்குடிக்கு புறப்பட்ட தனியார் விமானம், வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், மதுரை விமான நிலையத்தில் மதியம் 3.30 மணிக்கு தரையிறக்கப்பட்டது. பின்னர், வானிலை சரியானவுடன் மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றது.
 இதேபோல், மாலை 6 மணிக்கு சென்னையிலிருந்து மதுரை வரவேண்டிய விமானம், பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து மாலை 6.50 மணிக்கு மதுரை வந்தடைந்தது.   இதனால், அந்த விமானத்தில் சென்னை செல்ல வேண்டிய பயணிகள் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT