கோவை-நாகர்கோவில் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி தாற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: வண்டி எண்.16610/16609, கோவை-நாகர்கோவில் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிக்கு பதிலாக இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி தாற்காலிகமாக இணைக்கப்படுகிறது. இதையடுத்து இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஒன்பது, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் நான்கு, சரக்கு பெட்டிகள் இரண்டு இருக்கும்.
இந்த மாற்றம் கோவையில் இருந்து புறப்படும் ரயிலில் மே 19 முதல் ஜூன் 18 ஆம் தேதி வரையும், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலில் மே 20 ஆம் தேதி முதல் ஜூன் 19 வரையும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.