மதுரை

தனியார் ஏற்றுமதி நிறுவனத்துக்கு மதுரையில் மே 23-இல் ஆள்கள் தேர்வு

திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல், மதுரையில் மே 23-ஆம் தேதி

DIN

திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல், மதுரையில் மே 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: திருப்பூரில் செயல்படும் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்துள்ள 18 வயதிலிருந்து 35 வயதுக்குள்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். 6 மாதப் பயிற்சியும், அதன் பிறகு தகுதிக்கேற்ப சம்பள உயர்வும் வழங்கப்படும்.
   பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளமாக அளிக்கப்படும். இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

SCROLL FOR NEXT