மதுரை

திருமங்கலம் அருகே பேருந்து கவிழ்ந்து 26 பேர் காயம்

திருமங்கலம் கள்ளிக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் 26 பேர் காயமடைந்தனர்.

DIN

திருமங்கலம் கள்ளிக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் 26 பேர் காயமடைந்தனர்.
திருவனந்தபுரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு ஊட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, கள்ளிக்குடி அருகே புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் பின்னால் வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக விலகியபோது, சாலையோர ஓடையில் கவிழ்ந்தது.
இதில், ஓட்டுநரான நெல்லை சத்திரங்கொண்டானைச் சேர்ந்த ஜெயராஜ் (48), தூத்துக்குடியைச் சேர்ந்த மல்லிகா (48), முப்பிடாரி (62), ராதாகிருஷ்ணன் (60), வள்ளியூர் சிங்கராஜன் (43), கோயம்புத்தூர் ஜெயா (53), உடன்குடி சியேலா (24) உள்ளிட்ட 26 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரையும், திருமங்கலம், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து, கள்ளிக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT