மதுரை

"மதுரை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்'

மதுரை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கு வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நிலைய முதல்வர் ரா.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

DIN

மதுரை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கு வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நிலைய முதல்வர் ரா.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை (மகளிர்) அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  ஆன்லைன் (w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) மூலம் விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாக வரையறுக்கப்பட்டுள்ளது.
 பத்தாம் வகுப்பு படித்தோர் கம்மியர் மின்னணுவியல் பிரிவில் 2 ஆண்டுகள் பயிற்சி பெறலாம். மேலும் கணினி இயக்குபவர் மற்றும் திட்ட உதவியாளர், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர், பொது மற்றும் தனியார் கூட்டமைப்புத் திட்டம் ஆகியவை ஓராண்டு பயிற்சியும் கொண்டவையாகும். தையல் தொழில்நுட்பப் பயிற்சியில் சேர விரும்புவோர் எட்டு அல்லது பத்தாம் வகுப்பு படித்திருக்கவேண்டும். இதுவும் ஓராண்டு பயிற்சியாகும்.  தொழிற்பயிற்சியில் சேரும் மாணவியருக்கு கட்டணமில்லா பயிற்சிகள் அளிக்கப்படும். அத்துடன், அரசு உதவித் தொகை மாதம் ரூ.500, பேருந்து கட்டணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப் புத்தகங்கள் மற்றும் வரை படக் கருவிகள், இரண்டு சீருடை மற்றும் ஒரு காலனிகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் மேலும் விவரங்களுக்கு ரா.கலைச்செல்வி, அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், தொலைபேசி: 0452-2560544 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT