திருப்பரங்குன்றத்தை அடுத்த வடபழஞ்சி ஊராட்சியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வடபழஞ்சி ஊராட்சியில் நாகமலைபுதூர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒன்றரை மாதங்களாக சரிசெய்யப்படாமல் உள்ளதாம். இதனால், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியினர் குடம் ரூ.5-க்கு லாரியில் தண்ணீர் வாங்கவேண்டியுள்ளது. கூலித்தொழிலாளிகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் தண்ணீர் வாங்க மிகவும் சிரமாமாக உள்ளது எனக்கூறி சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் உடைந்த குழாயை சரிசெய்து தர வேண்டும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவானந்தத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். உடனடியாக சரி செய்து தருவதாக அவர் வாக்களித்தன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.