அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் பி.கே. மூக்கையா தேவரின் 39 ஆவது குருபூஜை புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், அதிமுக சார்பில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே. ராஜூ, பாஸ்கரன், மணிகண்டன், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். பார்த்திபன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, நீதிபதி, மாணிக்கம், பெரிய புள்ளான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, அதிமுக அம்மா அணி சார்பில், மதுரை புறநகர் மாவட்டச் செயலர் இ. மகேந்திரன், தேனி மாவட்டச் செயலர் தங்க தமிழ்ச்செல்வன், அமைப்புச் செயலர் மேலூர் ஆர். சாமி, இலக்கிய அணி செயலர் டேவிட் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் துரை தனராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி சார்பாக, அதன் செயலர் பாண்டியன், முதல்வர் ராசேந்திரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் பி.வி. கதிரவன், சமாஜ்வாதி பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.பி. அல்லிக்கொடி, அகில இந்திய பார்வர்டு பிளாக் சந்தானம் பிரிவு சார்பில் அமைப்புச் செயலர் எல்.எஸ். இளங்கோவன், பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் முருகன் ஜீ, பார்வர்ட் பிளாக் பசும்பொன் குரூப் சார்பில் மாநிலச் செயலர் பசும்பொன் பாண்டியன், தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் திருமாறன் ஜீ மற்றும் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் மாநில மகளிரணி தவமணியம்மாள் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.