மதுரை

ஜல்லிக்கட்டு மாடு முட்டி கட்டடத் தொழிலாளி சாவு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில், அதை வளர்த்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

DIN

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில், அதை வளர்த்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     வில்லாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (54). கட்டடத் தொழிலாளியான இவர், தனது வீட்டில் ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து வந்துள்ளார். புதன்கிழமை  மாட்டை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றாராம். அப்போது, எதிர்பாராத விதமாக மாடு முரண்டு பிடித்து மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ரவியை முட்டியுள்ளது.
இதில், படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ரவியின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவனியாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT