மதுரை

தமிழக முதல்வர் இன்று மதுரை வருகை: காமராஜர் பல்கலை. உறுப்புக் கல்லூரியை திறந்து வைக்கிறார்

மதுரையை அடுத்த கப்பலூரில் ரூ. 7.25 கோடியில் கட்டப்பட்டுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைக்கிறார்.

DIN

மதுரையை அடுத்த கப்பலூரில் ரூ. 7.25 கோடியில் கட்டப்பட்டுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைக்கிறார்.
சேலத்தில் இருந்து காரில் வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு மதுரை வரும் அவர்,  திருமங்கலம் வட்டம் கப்பலூரில் நடைபெறும் புதிய கல்லூரிக் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார்.
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகிக்கிறார். தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன்,  செல்லூர் கே. ராஜூ,  கே.பி. அன்பழகன், கடம்பூர் ராஜூ, கே.டி. ராஜேந்திர பாலாஜி, எம். மணிகண்டன், ஜி.பாஸ்கரன்,  மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
முதல்வர் வருகையையொட்டி விழா முன்னேற்பாடுகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். துணைவேந்தர் பி.பி. செல்லதுரை, சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி. ராஜன்செல்லப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்வர் வருகையையொட்டி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேலத்தில் இருந்து கார் மூலம் மதுரை வரும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி,  கல்லூரி நிகழ்ச்சிக்குப் பிறகு தூத்துக்குடி செல்கிறார். அங்கு கல்லூரி விழா மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் காரில் மதுரை வரும் அவர், இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT