மதுரை

தீக்குளித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவர் சாவு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே தீக்குளித்த மனைவியை காப்பாற்றச் சென்ற மாற்றுத் திறனாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

DIN

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே தீக்குளித்த மனைவியை காப்பாற்றச் சென்ற மாற்றுத் திறனாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
      பாலமேடு கீழத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(30). மாற்றுத் திறனாளியான இவர், தையல் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயசுதா (23). ராஜேந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    இந்நிலையில், உறவினர் வீட்டு விசேஷத்துக்கு திங்கள்கிழமை சென்ற ராஜேந்திரன் மது அருந்தி வந்துள்ளார். இதை, ஜெயசுதா தட்டிக்கேட்டதால் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜெயசுதா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடனே, ராஜேந்திரன் தனது மனைவியை காப்பாற்றச்சென்றபோது, அவர் மீதும் தீப்பற்றியது. இவர்களின் சப்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.      ஜெயசுதா கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து பாலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT