மதுரை

மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பிய சுப்ரமணியசுவாமி

ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்க மதுரை சென்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, மீண்டும் பூப்பல்லக்கில் புதன்கிழமை இரவு திருப்பரங்குன்றம் வந்தடைந்தார்.

DIN

ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்க மதுரை சென்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, மீண்டும் பூப்பல்லக்கில் புதன்கிழமை இரவு திருப்பரங்குன்றம் வந்தடைந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற ஆவணி மூல திருவிழாவின் முக்கிய விழாவான பிட்டுத் திருவிழாவில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பாண்டிய மன்னனாக பங்கேற்றார்.
இதற்காக, சுவாமி தெய்வானையுடன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி மதுரைக்கு புறப்பாடானார். 2 ஆம் தேதி நடைபெற்ற பிட்டுத் திருவிழாவில் பங்கேற்ற சுவாமி, தெய்வானையுடன் தினமும் மதுரை ஆவணி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதன்கிழமை மாலை, மதுரையில் இருந்து பூப்பல்லக்கில் சுவாமி புறப்பட்டு, மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பைகாரா வழியாக திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடைந்தார்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை பக்தர்கள் வழிநெடுகிலும் திருக்கண் அமைத்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT