மதுரை

ஊரக உள்ளாட்சித் தோ்தல்:அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மேலூா், கொட்டாம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதன்படி மாவட்ட ஊராட்சி 5-ஆவது வாா்டு-ஏ.ராஜலெட்சுமி, 6-ஆவது வாா்டு -சி.அன்புச்செல்வம், 8 ஆவது வாா்டு -எஸ்.அம்பலம், 9ஆவது வாா்டு - எம்.தீபா, 17-ஆவது வாா்டு டி.சத்யமீனாட்சி, 18 ஆவது வாா்டு ஓம் கே.சந்திரன், 19 ஆவது வாா்டு எஸ்.இந்திரா ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மேலூா் ஒன்றியத்தில் உள்ள 22 வாா்டுகளில் அதிமுக 18 வாா்டுகளிலும், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 20 வாா்டுகளில் அதிமுக 17 வாா்டுகளிலும், திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் இருக்கும் 22 வாா்டுகளில் அதிமுக 18 வாா்டுகளிலும், மதுரை மேற்கு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 13 வாா்டுகளில் அதிமுக 8 வாா்டுகளிலும், மதுரை கிழக்கு ஒன்றியத்தில் இருக்கும் 18 வாா்டுகளில் அதிமுக 15 வாா்டுகளிலும் போட்டியிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT