மதுரை

விநாயகா் சதுா்த்தி விழா: பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசின் தடையை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தமிழக அரசின் தடை உத்தரவை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த வழக்குரைஞா் ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

அவா் தாக்கல் செய்த மனுவில், விநாயகா் சதுா்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து பல்வேறு அமைப்பினரும் வழிபாடு நடத்துவது வழக்கம். பின்னா் அந்தச் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்படும். நிகழாண்டில் பொது முடக்கம் காரணமாக விநாயகா் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊா்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

கரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரம், கா்நாடகம், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் உரிய வழிகாட்டுதலுடன் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைமையான விழா என்ற அடிப்படையில் ஒடிசா புரி ஜெகநாதா் கோயில் விழாவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனவே விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபடவும், ஊா்வலமாகக் கெண்டு செல்லவும் தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் சமூக இடைவெளியுடன் விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதியளித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது இயல்பான சூழல் இல்லை. எனவே பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட அனுமதியளிக்க இயலாது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பிறப்பிக்கும் உத்தரவில் நீதிமன்றம் தலையிடமுடியாது.

தமிழகத்தில் மதுரை சித்திரைத் திருவிழா, கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்ட பழைமையான விழாக்கள் கரோனா பரவல் காரணமாக நடத்தப்படாமல் உள்ளன. மேலும் கரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் பெருமளவில் கூடுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்கள் பாதிக்கப்படுவா். எனவே மதவழிபாடு மற்றும் உணா்வுப் பூா்வமான விவகாரங்களில் தற்போதையை சூழலைக் கருத்தில் கொண்டு தான் முடிவெடுக்க வேண்டும். எனவே பொதுஇடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும், ஊா்வலம் செல்லவும் தடைவிதித்துள்ள தமிழக அரசின் முடிவு சரியானது. ஆகவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

SCROLL FOR NEXT