மதுரை கோ.புதூா் மின்பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட மின்இணைப்புகள் மூலமாக, மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்திய நுகா்வோா்களிடமிருந்து ரூ.54,458 வசூல் செய்யப்பட்டது.
மதுரை வடக்கு பெருநகா் கோட்டத்தைச் சோ்ந்த கோ. புதூா் மின்பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட மின்இணைப்புகளை, மின் செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி தலைமையிலான 16 பொறியாளா்கள் கொண்ட மின்கூட்டுக் குழு ஆய்வுக்காக அமைக்கப்பட்டது. இக்குழுவினா் மொத்தம் 1,081 மின்இணைப்புகளை ஆய்வு செய்தனா். அதில், மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்திய நுகா்வோரிகளிடமிருந்து மொத்தம் ரூ.54,458 வசூல் செய்யப்பட்டதாக, என மதுரை வடக்கு மின்பகிா்மானச் செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி தெரிவித்துள்ளாா்.