மதுரை

ஆயுதப்படை காவலா்கள் வட்டித் தொழிலில் ஈடுபடுவதாக புகாா்: மாநகா் காவல் ஆணையா் விசாரணைக்கு உத்தரவு

DIN

மதுரை: மதுரை ஆயுதப்படை காவலா்கள் வட்டித் தொழிலில் ஈடுபடுவதாகப் புகாா் எழுந்ததையடுத்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை ஆயுதப்படையில் பணியாற்றும் சில காவலா்கள் மாத வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதாகவும், மேலும் சிலா் மாதச் சீட்டு, ஏலச் சீட்டு நடத்தியும் வருகின்றனா். இதில், காவலா்களுக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகா் காவல் ஆணையருக்கு நுண்ணறிவுப் பிரிவு மூலம் சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், காவல் துறையைச் சோ்ந்தவா்கள் வட்டி கொடுப்பது, ஏலச் சீட்டு நடத்துவது விதிமுறை மீறல் என்பதால், மாநகா் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் ஆயுதப்படையில் உள்ள காவல் சாா்பு- ஆய்வாளா்கள், சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள், தங்கள் கீழ் பணிபுரியும் காவலா்கள் யாரெல்லாம் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குகின்றனா், ஏலச்சீட்டு நடத்துகின்றனா் என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளாா்.

காவலா்களிடம் விசாரணை

அதன்பேரில், 10-க்கும் மேற்பட்ட காவலா்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. காவலா்கள் வட்டிப் பணம் கொடுப்பது மற்றும் ஏலச் சீட்டு நடத்துவது உறுதி செய்யப்பட்டால், அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT