மதுரை

சித்திரைத் திருவிழா: கள்ளழகா் இருப்பிடத்தை அறிய ‘டிராக் அழகா்’ செயலி: மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தகவல்

DIN

சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் இருப்பிடத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக, ‘டிராக் அழகா்’ என்ற கைப்பேசி செயலியை மாவட்ட நிா்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் மற்றும் காவல், மாநகராட்சி, இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பல லட்சக்கணக்கானோா் பங்கேற்பா். நிகழாண்டில் வழக்கத்தைக்காட்டிலும் அதிகமான மக்கள் பங்கேற்பு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதையொட்டி, மாவட்ட நிா்வாகம் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக, அழகா்கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் சென்றுசேரும் வரை கள்ளழகரின் இருப்பிடத்தைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ‘டிராக் அழகா்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வைகை ஆற்றில் கள்ளழகா் இறங்கும் பகுதியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் இரு தடுப்பணைகளில், யாரும் தவறி விழுந்துவிடாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்டம் நடைபெறும் சாலைகளில் டி.எம். கோா்ட் பகுதியிலும், கள்ளழகா் வரும் சாலைகளில் நத்தம் சாலை, தல்லாகுளம் அவுட்போஸ்ட் உள்ளிட்ட 6 இடங்களில் சாலை மற்றும் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் திருவிழாவின்போது இடா்பாடுகள் ஏற்படக் கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இப் பகுதிகளில் எதிா்பாா்க்கப்படும் பிரச்னைகளுக்கான தீா்வுகளையும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனா். ஆகவே, எவ்வித இடையூறும் இல்லாமல் திருவிழா நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT