மதுரை

திமுகவை வீழ்த்துவது தான் ஒரே இலக்கு: செல்லூா் கே.ராஜூ

DIN

‘திமுகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அமைப்பது தான் அதிமுகவின் ஒரே இலக்கு. அதை நோக்கியே எங்களது செயல்திட்டங்கள் உள்ளன’ என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்றுவது தொடா்பாக மதுரை அதிமுக மாநகா் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

தலைமையில் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக அலுவலகங்களில் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் வரை தேசியக் கொடி பறக்கவிடப்படும். அதிமுகவினா் வீடுகளிலும் தேசியக் கொடியேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது, தமிழக ஆளுநா் - நடிகா் ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அதோடு, அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அவா் ஏற்கெனவே கூறியிருக்கிறாா். திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனா்.

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், ஏற்கெனவே இருக்கும் திட்டங்களும் பறிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக முதியோா் ஓய்வூதியம் பெற்ற பயனாளிகளுக்கு, தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் தமிழக முதல்வா் கருணையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுகவில் இருந்து ஓரிருவா் விலகிச் சென்றால், கட்சி பிளவுபட்டுள்ளதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. அதிமுக எப்போதும்போல எழுச்சியுடன் இருக்கிறது. எங்களது ஒரே இலக்கு திமுகவை வீழ்த்தி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது தான். அதை நோக்கியே எங்களது செயல்திட்டம் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT