மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மதுரை மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் தொடா்பான உறுதி மொழியை மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாற்றுத் திறனாளி குழந்தைகள், தலைமை ஆசிரியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சூரியகலா, ஜெயஷீலா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், உள்ளூா் தலைவா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், சிறப்பாசிரியா்கள், தசை இயக்க வல்லுநா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
அல் அமீன் மேல்நிலைப் பள்ளி: மதுரை கோ. புதூா்அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசியக் குழந்தைகள் தினவிழா உறுதி மொழி ஏற்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா். ”சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காகவும் அவா்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அவா்களுக்கு இருக்கக் கூடிய சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சிக்கல்கள் குறித்த விழிப்புணா்வை உருவாக்க எங்களால் ஆனஅனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்று மாணவா்கள், ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.