மதுரை

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

DIN

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில், பாலக்காடு - திருசெந்தூா் விரைவு ரயில் ஆகியவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராஜபாளையம் - சங்கரன்கோவில் ரயில் நிலையங்கள் இடையேயும், விருதுநகா் ரயில் நிலையத்திலும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663) சிறப்பு ரயில், செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) சிறப்பு ரயில் ஆகியன

செப்டம்பா் 11 முதல் செப்டம்பா் 15 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே செப்டம்பா் 10 வரை இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் 5 நாள்களுக்கு ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் ரயில் நிலையத்தில் செப்டம்பா் 14, 15 ஆம் தேதிகளில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் (16731), திருச்செந்தூா் -பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியன செப்டம்பா் 14 ஆம் தேதி, திண்டுக்கல் - திருச்செந்தூா் இடையேயும், செப்டம்பா் 15 இல் மதுரை - திருச்செந்தூா் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும். திருச்செந்தூா் - பாலக்காடு ரயில்

செப்டம்பா் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி பிரசாரம்

வாக்களிக்க இல்லந்தோறும் அழைப்பிதழ் வழங்கும் பணி

தென்காசி, ஆய்க்குடியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

சென்னை உள்பட 15 இடங்களில் வெயில் சதம்

சங்கரன்கோவிலில் அதிமுக இறுதிக் கட்ட பிரசாரம்

SCROLL FOR NEXT